வருகின்ற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 20ஆவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் உள்ள 118 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கட்சிக்கொடி ஏற்றிவைத்த பின்பு அலுவலகத்தில் கூடியிருந்த 500க்கும் அதிகமான தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை […]
