சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய கோர தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரிய நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இட்லிப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்படும் சிரியாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. […]
