சென்னை மாநகராட்சியில் பறக்கும் படை குழுவினரால் கடந்த 1 வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகள், கட்டடக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளில் பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் வடிகால்களில் 32 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
