கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அகில இந்திய தேசிய தலைவர் ஜே.பி நாட்டா நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். அந்த வகையில் முதன்முறையாக கோவை மற்றும் நீலகிரியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜே.பி நட்டா கோவை மற்றும் நீலகிரியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் ஜேபி நட்டாவின் சுற்றுப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் […]
