சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. […]
