Categories
உலக செய்திகள்

“இந்த வருடத்தின் ஆரம்பமே சரியில்ல!”….. ஆஸ்திரேலிய நடிகையின் பரிதாப நிலை……!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நடிகை, இந்த 2022-ஆம் வருடம் எனக்கு சிறப்பாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அல்லி சிம்ப்சன் என்ற நடிகை, ஆழமில்லாத ஒரு குளத்தில் டைவ்  அடித்திருக்கிறார். அப்போது, அவரின் கழுத்துப்பகுதியில் பயங்கரமாக அடிப்பட்டது. இதனால், அவரின் கழுத்து உடைந்தது. எனவே, தற்போது, குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நான் தற்போது உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் தான், இன்னும் […]

Categories
சினிமா

“ஆஹா, அருமை!”….. 9 திரைப்படங்களில் நடிக்கும் ஹன்ஷிகா…. வெளியான சூப்பர் தகவல்….!!

நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது ஒன்பது படங்களை கைவசம் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ஆம் வருடத்தில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான 100 என்ற திரைப்படத்தில் தான் அவர் கடைசியாக நடித்திருந்தார். மேலும் அவர் நடித்திருக்கும், மகா திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த 2022 ஆம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று எப்போது முடியும்….? கோடீஸ்வரர் பில்கேட்ஸ் கணிப்பு….!!

கொரோனா பரவலுக்கான கடுமையான நிலை, வரும் 2020 வருடத்திற்குள் முடிவடையும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் கணித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவரான, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தன் இணையதள பக்கத்தில் கொரோனா நிலை தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். அதில், கொரோனா பரவலின் நிலை குறித்து, ஒரு கணிப்பை குறிப்பிடுவது என்பது முட்டாள்தனமாக இருக்கும். ஆனால், கொரோனா பரவலின் கடுமையான நிலை அடுத்த வருடத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று தான் கருதுவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தன் வாழ்க்கையிலேயே […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் ஜாலி தான்!”…. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி நாட்கள் குறைப்பு… வெளியான அறிவிப்பு…!!

ஐக்கிய அரபு அமீரக அரசு, வாரத்தின் பணி நாட்களை நான்கரை நாட்களாக குறைப்பதாக அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில இனிமேல் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தின் இறுதி நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து மத்திய துறைகளிலும் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்திலும், காலை 7:30 மணியிலிருந்து மாலை 3:30 மணி வரை தான் பணி நேரம் […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் ஆண் கோழிக்குஞ்சுகளை கொல்லக்கூடாது!”.. புதிய சட்டம் கொண்டுவந்த ஜெர்மன்..!!

ஜெர்மன் நாட்டில் ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஜெர்மன் அரசு ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. இதனை வரும் 2022 ஆம் வருடம் ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜெர்மன் நாடாளுமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கோழி குஞ்சு வளர்ப்பு முறை சரியல்ல என்று விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் ஜெர்மன் மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது உலக நாடுகளில் இருக்கும் கோழிப்பண்ணைகளில் பாரம்பரியமாகவே, […]

Categories
உலக செய்திகள்

“விரைவில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்!”.. பிரிட்டன் நம்பிக்கை..!!

பிரிட்டனில் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான Clive Dix, வரும் மூன்று மாதங்களில் நாட்டில் கொரோனாவின் தடம் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரிட்டன் பணிக்குழு தலைவர் Clive Dix, வரும் 2022ஆம் ஆண்டு வரை நாட்டு மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் தேவைப்படாது என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது வரை சுமார் 50 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகம் நீடித்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் […]

Categories

Tech |