இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியான ஹர்னாஸ் சாந்து 2021 ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரிலுள்ள யுனிவர்ஸ் டோமில் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற அந்த போட்டியின் இறுதியில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து என்பவர் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். […]
