காவல்துறையினரால் 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஒரு குழு அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மங்குனி தோட்டம் வனப்பகுதியில் சந்தகேப்படும்படியாக டிரம்கள் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில் மர்மநபர்கள் சாராய காய்ச்சுவதற்கான ஊறலை வைத்திருந்தனர். அதில் மொத்தம் 2,000 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. […]
