அமெரிக்க நாட்டின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம், நேற்று திடீரென்று 200 விமானங்களை ரத்து செய்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தை அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், இந்நிறுவனமானது நேற்றுமுன்தினம் 165 விமானங்களையும், நேற்று 200 விமானங்களையும் ரத்து செய்திருக்கிறது. எனவே இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல், தங்களின் கோபத்தை இணையதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் இந்த நிறுவனத்தை சேர்ந்த விமானிகளின் பணி […]
