இந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து சூரையடியுள்ளனர். வங்காள தேசத்தின் டாக்கா என்ற நகரில் ராதாகந்தா கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கோவிலுக்குள் 2௦௦ பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்தது. மேலும் அவர்கள் கோவிலை சூரையாடியதோடு அங்குள்ள பக்கதர்களையும் காயப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து கோவிலுக்குள் இருந்த சாமி நகைகள் மற்றும் கோவில் சார்பான அனைத்து பொருள்களையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர். […]
