ஏ.டி.எம் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் 1 லட்சத்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அதனை நெடுஞ்சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பெயர்த்து காரில் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் […]
