நேற்று அதிகாலை டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமாகியுள்ளது. டெல்லி மாநிலத்தில் தென்கிழக்கு பகுதியில் ஒக்ஹலா சஞ்சய் காலனியில் குடிசை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றார்கள். மேலும் இதன் அருகில் துணி குடோன்களும் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் குடிசைப்பகுதியில் திடீரென்று தீ பிடித்து மளமளவென குடிசை வீடுகளுக்குப் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். […]
