தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் வில்லனாக மிரட்டி வந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவர் தற்போது கட கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய இவர், “சம்பாதித்த காசை சேர்த்து வைக்காததால், மருத்துவத்திற்கு பணம் இல்லை. இதனால் விரக்தியடைந்து 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. அதன் பின்னரே நடிகர்களிடம் உதவி கேட்டேன்” என கூறியுள்ளார்.
