20 மாதங்களுக்கு பிறகு தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடந்த 20 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளை அமெரிக்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு தனது எல்லையை திறந்து அவர்களை அமெரிக்கா அனுமதித்துள்ளது. தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களை வைத்திருப்பவர்களை அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் பெரியவர்களுடன் வரும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தடுப்பூசி போட கட்டாயம் இல்லை எனவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் […]
