கிராம மக்களின் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்த ராணுவ ஆட்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது அந்நாட்டு ராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 845 திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு பயந்து 3,000 த்திற்கும் மேலானோர் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர். இதனிடையே […]
