விபத்தில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்தில் மாயி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷேவாக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஷேவாக்கும் ஹரிஹரனும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் செக்கானூரணி நோக்கி சென்று […]
