தூர்வாரும் பணியின் போது நடந்த தகராறில் பஞ்சாயத்து தலைவரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரபுரத்தில் பஞ்சாயத்து தலைவரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீர் மற்றும் மண்ணை அகற்றும் பணியினை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள வடக்குத்தெரு பகுதியில் பணி நடந்து கொண்டிருந்த போது சக்திவேல் என்பவரின் மகன்களான கருங்கதுரை, தங்களுடைய இடத்தில் மணலை ஒதுக்கக் […]
