விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் சரவணன்(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருக்கும் 7 அடி ஆழடைய உறை கிணற்றை காளிதாஸ்(55) என்பவருடன் இணைந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி காளிதாஸ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் காளிதாஸை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். […]
