செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களிடம் இருந்து செல்போன் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அவர்களை பிடிக்க போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோமதிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற முதியவர் மேலமடை பகுதியில் இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த […]
