ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இரண்டு செய்தியாளர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஜிப்பில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அந்தக் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது. இதில், அந்த இரண்டு […]
