நூல் மில்லில் ஏற்பட்ட தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணபதி நகரில் நூல் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நூல் மில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சு வைத்திருந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. […]
