திடீரென பற்றிய தீயில் கரும்பு வயல் எரிந்து நாசமானதால் விவசாயி வேதனை அடைந்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கராயன் கட்டளை கிராமத்தில் சின்னமணி என்பவர் தனக்குரிய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் காற்று வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
