டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற 17-ஆம் தேதி “ராக்தான் அம்ரித் மகோத்சவ்” எனும் பெயரில் தேசிய அளவிலான ரத்ததான இயக்கத்தை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா துவங்கி வைத்தார். இந்நிலையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்து இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்தியா புது மைல்கல்லை பதிவுசெய்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளில் […]
