சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சல்க்கல்பட்டி பகுதியில் ராதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி-எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பம்பாளையம் பால்வினியோகம் மையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை பறித்துச் சென்றனர். இது குறித்து ராதா போலீசில் புகார் […]
