கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோதுக்கானபள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய மனோஜ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மனோஜ் குமார் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மனோஜ் குமாரை மீட்டு ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மனோஜ் குமாரை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]
