குடியரசு தினத்தன்று தேசிய கொடியை இறக்க முயற்சி செய்தபோது கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு விடுதியில் உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று மாலை விடுதி காப்பாளர் காஜல், கரன் மற்றும் தியா என்ற மூன்று மாணவிகளை அழைத்து கொடிக்கம்பத்தில் […]
