சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து […]
