விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணகடேசுவரர் கோவி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மன்னர்கள் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி தானம் அளித்தவர்களில் குறிப்பிட்டத்தகுந்தவர்கள் ராஜேந்திர சோழர் சேதிராயர், மற்றும் விக்ரம சோழ சேதிராயர் ஆவர். இவர்கள் கிபி 12-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். இவர்களின் உருவ சிலைகள் […]
