பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்திலிருந்து அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் கோவிலில் அதிகாலை முதல் அடிவாரம், பாத விநாயகர் கோவில், மலை கோவில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் வெளியூர், வெளி […]
