ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் உள்ள நல்லூரில் விஜயகுமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சிரஞ்சீவி(6) விக்னேஷ்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு பழனியம்மாளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் தனது 2 மகன்களுடன் நேற்று வீட்டை விட்டு வெளியேறி செல்வதாக கூறிவிட்டு மொபாட்டில் சென்றார். கோபியை எடுத்த காளிக்குளம் அருகில் […]
