இஸ்ரேலில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில், 2 போலீசார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள ஷரோன் மாகாணம் ஹடீரா என்ற நகரில் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஒரு உணவகத்தின் அருகே சில போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். […]
