கனடாவில் “ஒமிக்ரான்” வைரஸ் பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கனடா அரசு புதிய வகை “ஒமிக்ரான்” கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான பயணத்திற்கு தடை விதித்தது. ஆனால் நைஜீரியா நாடு அந்த பயண தடையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் கனடாவில் புதியவகை ஒமிக்ரான் பாதிப்பு 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் நைஜீரியாவுக்கு சென்று திரும்பி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் […]
