சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கூகுடி ஊராட்சி அறநூற்றிவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் திருவாடனை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த ஆற்றில் சிலர் மண்ணள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மணல் அள்ளிக் கொண்டு அவர்களை பிடிக்க […]
