சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சரக்கு வேனில் 54 மூடை ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் காவல்துறையினர் எம்.கரிசல்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுரைக்கு பரமக்குடியிலிருந்து சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் சரக்கு வேனில் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த […]
