Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்… தடை செய்யப்பட்ட சீட்டுகள் பறிமுதல்…!!

போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சின்னமனூரை சேர்ந்த நாகராஜ், கரட்டுபட்டியை சேர்ந்த பாரதி ஆகிய இருவரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட 50.000 ரூபாய் மதிப்புள்ள 1,350 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… தாசில்தாரின் அதிரடி சோதனை… 2 பேர் கைது…!!

தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருசுழி ஆற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாதியின் பெயரை வைத்து… பட்டதாரியை தாக்கிய இளைஞர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

சாதியின் பெயரைக்கூறி பட்டதாரியை  தாக்கிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி காலனியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தனது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் புது பாளையத்தை சேர்ந்த சூர்யா ஆகியோரும் விஜயுடன் விளையாட வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று  முன்தினம் விஜய் புதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு வழக்குகளில் தொடர்பு… ஆட்சியரின் அதிரடி உத்தரவு… குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள எட்டிசேரியில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடத்த மாதம் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து பம்மனேந்தலை சேர்ந்த தர்மராஜ், எருமைகுளம் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய இளைஞர்கள் மது கடைக்குள் இருந்த 52,000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

18 பவுன் நகைகள் மோசடி… பெண்ணுக்கு கொலை மிரட்டல்… 2 பேரை கைது செய்த காவல்துறையினர்…!!

நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 18 பவுன் நகையை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்ரஹாரம் கோட்டைக்காடு லட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று வளர்மதி அவரது தங்க நகைகளை சோப்பு தண்ணீரில் கழுவிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது முத்துவின் நண்பர்களான பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய இருவரும் முத்துவின் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள்… காவல்துறையினர் அதிரடி…. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது…!!

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியில் சக்திமுருகன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அழகுராஜாவும் டிராக்டரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் முன்பகை காரணமாக சக்திமுருகனையும், அழகுராஜவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சக்திமுருகன் இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும் படி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கார்த்திகேயன் மற்றும் சூரத் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த 3-ஆம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரின் முன்பு நடந்த சண்டை… 2 பேர் கைது…இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொது இடத்தில் வைத்து காவல்துறையினரின் முன்னிலையில் சண்டை போட்டுக்கொண்ட 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் கிழக்குதெருவில் யமுனா செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரண்மனை பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்த நிலையில் அவ்வபோது பிணம் எரிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் பிணம் எரிக்க செல்லும்போது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை அழைத்து சென்றுள்ளார். இந்த வேலை செய்ததற்க்கான கூலியை செல்வக்குமார் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. மாட்டிக்கொண்ட 2 பேர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

நாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  நாகை மாவட்டம் நாகூர்  யூசுப்பியா நகரில் உள்ள  வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நாகை  போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் , சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் ஒரு வீட்டில் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுக்க முடியாது… கூலித்தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… இளைஞர்கள் செய்த செயல்…!!

தேனி மாவட்டம் லிப்ட் கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளியை தாக்கிய 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவில் மணிமாறன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது உதயம் நகர் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்த போது க.புதுப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(19) என்ற இளைஞன் மணிமாறன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். இதற்கு மணிமாறன் மறுத்ததால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல் ….. அனுமதியின்றி கடத்த முயற்சி …. 2 பேர் கைது …..!!!

அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாப்படுகை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது மாப்படுகை அண்ணாசாலை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் காவிரி ஆற்றிலிருந்து  மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண்ணை ஏமாற்றிய இளைஞன்… ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள்… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளியை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் கணேசமூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்ணை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து கணேசமூர்த்தி வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில் மகேஷ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது …. வசமகா சிக்கிய 2 பேர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம்  வேதாரண்யதில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடமும்  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் கோடியக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன்(27), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பொதுமக்கள் அளித்த புகார்… வாகன சோதனையில் தாசில்தார்… 33 அரிசி மூட்டைகள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 33 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடத்தலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி அடுத்துள்ள வெங்கிட்டன் குறிச்சி விலக்கு சாலையில் பரமக்குடி தாசில்தார் தமிழ் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்… பிடிப்பட்ட குற்றவாளிகள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டிகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழம் தோட்டம் கிராமத்தில் வசிக்கும் முத்துவேல் மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் இதையெல்லாமா வளர்ப்பிங்களா… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/ தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள பூசணிமலை பகுதியில் உள்ள மாந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து க22 ஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் நின்ற போலீசார்… அப்பகுதியில் வந்த சொகுசு கார்… வசமாக மாட்டிய 2 பேர்…!!

தேனி மாவட்டத்தில் சொகுசு காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தமிழக-கேரளா எல்லையான குமுளியில் உள்ள கலால் சோதனை சாவடியில் பீர்மேடு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது குமுளி நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காரில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த வண்டிப்பெரியார் பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… சம்பவ இடத்திற்கு சென்று சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்திபனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ்(57) மற்றும் மன்சூர் அகமது(51) ஆகிய இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இத சும்மா விட கூடாது… கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… மேலும் 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிவந்த 2 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மணல் கடத்தலால் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமுதி அபிராமம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிட்டோ, ராஜாராம், தனிப்பிரிவு ஏட்டு லிங்கராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்தியது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுபாட்டில போதை மருந்து ….. கிடைத்த ரகசிய தகவல் …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ….!!!

மதுபாட்டிலில் போதை மாத்திரைகளை கலந்து விற்று வந்த  2 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மதுபாட்டில்களில் போதை மருந்து கலந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டிக்கர்கள் இல்லாத  மதுபாட்டில்களில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் என நாடகமாடி 5 1/2 நகைகளை திருடி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மாதேஸ்வரி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி 2 மர்மநபர்கள் தங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததாக கூறி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எரிசாராயம் பதுக்கல் …. வசமாக சிக்கிக்கொண்ட 2 பேர் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேரையும்  குண்டர் சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா சுருட்டல் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (வயது 33) மற்றும் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தில் சிவபிரகாஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 31) இருவரும் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது இருவரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் இவர்களுடைய குற்றச்செயலை கட்டுப்படுத்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இந்த வழியாக தான் வாராங்க… எல்லாம் தடை செய்யப்பட்ட பொருட்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஓசூர் வழியாக தமிழகத்திற்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய காவல்துறையினர் அதன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமான செயல்… வசமாக சிக்கிக் கொண்ட இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாட்லாம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் ஏரிக்கரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த சந்தோஷ், பெரியகண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்னது 1,800 கிலோவா…? பிடிபட்ட கடத்தல் லாரி… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1,800 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்து வரும் நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் தலைமையில் காவல்துறையினர் கமுதியை அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய்க்கும் மகனுக்கும் அரிவாள் வெட்டு… தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… பொதுமக்கள் சாலைமறியல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிக்கடை வியாபாரியையும் அவரது தாயாரையும் அரிவாளால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பாம்பூர் பகுதியில் அகிலன் என்பவர் கோழிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முன்பகை காரணமாக புழுதிக்குளம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அகிலனை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த அவரது தாயார் முருகேஸ்வரி தடுக்க முயன்ற நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த தாயும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நீ பெரியவனா நான் பெரியவனா” …. பிரபல ரவுடிக்கு கத்தியால் சரமாரி வெட்டு …. 2 பேரை கைது செய்த காவல்துறை….!!!

மது போதையில் நண்பர்களுக்கு இடையே நடந்த  மோதலில் ரவுடியை கத்தியால்  சரமாரியாக வெட்டிய அவரருடைய 2  நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில்  புதுகும்மிடிப்பூண்டி அருகில் உள்ள  பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் என்பவர்  மீது பல்வேறு கொலை , கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. அத்துடன் இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி நடவடிக்கை… 2 பேர் கைது… ஜே.சி.பி.இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ஜே.சி.பி இயந்திரம் உட்பட டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சண்முகாபுரம் ஓடை பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சண்முகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டில் கஞ்சா செடியா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த வெள்ளப்பட்டியை சேர்ந்த ராஜசேகர்(24) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது சாயல்குடி அடுத்துள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(26) என்பவரிடமிருந்து கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இவங்க தொல்லை தாங்கல… போலீசாருக்கு கிடைத்த புகார்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வெளியேறியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலந்தைகுளம் சாலையில் 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சாயல்குடி அடுத்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு ரூபாய் 68000 …. மாட்டிக்கொண்ட ஊழியர்கள் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

மருத்துவமனையில்  மாத்திரைகளை திருடி வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள  சிப்காட் தொழிற்பேட்டையில்  தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் அங்கிருக்கும் மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூபாய் 68,000 மதிப்பிலான சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் 4, 2 00 மாத்திரைகள் அங்கிருந்து திருடப்பட்டிருந்தது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள் …. 8 கிலோ கஞ்சா பறிமுதல் …!!!

பேருந்தில் கஞ்சா  கடத்த முயன்ற வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்து   விசாரணை   நடத்தி வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்ததை நிறுத்தி  போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிதுன், சீபு நந்தா ஆகிய 2  வாலிபர்களை போலீசார் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருதரப்பினரிடையே மோதல்… ஒருவருக்கு கிடைத்த அரிவாள் வெட்டு… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையே நடந்த தகராறில் போலீசார் 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் நம்பு சுப்பிரமணியன் என்பவர் பழுதான படகுகளை பழுது பார்க்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் சுப்ரமணியன் தொழில் நடத்தி வரும் இடம் தொடர்பாக முக்குத்தி முருகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முக்குத்தி முருகன் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுப்பிரமணியன் மகன்களான பாலசுதர்சன் மற்றும் ஸ்ரீகாந்த்துடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியர் வீட்டில் நடந்தது என்ன…? வசமாக சிக்கிய இருவர்… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

வங்கி காசாளர் வீட்டில் திருடிய 2 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் அலி அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் வங்கியில் காசாளராக பணி புரியும் தில்ஷாத் பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் நுழைந்து 8 பவுன் நகைகளை திருடியுள்ளனர். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் தில்ஷாத் பேகம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடுபோன […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலையில் கூட போக முடியல… பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சாலையில் செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதால் 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலையில் 2 நபர்கள் கத்தியால் பொதுமக்களை மிரட்டுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே பொதுமக்களை கத்தியால் மிரட்டிக் கொண்டிருந்த 2 நபர்களை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர்கள் ராஜா மற்றும் வசீகரன் என்பது தெரியவந்துள்ளது. இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1 1/4 கிலோ… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் செயல்…!!

காரில் 2 லட்சம் மதிப்புடைய கஞ்சா கடத்தி சென்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செட்டிமண்டபம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பத்தடி பாலம் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்தக் காரில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1  1/4 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடித்து விட்டு தகராறு… நண்பர்களுடன் இணைந்து போட்ட திட்டம்… கொத்தனாருக்கு கிடைத்த அரிவாள் வெட்டு…!!

ராமநாதபுரத்தில் முன்பகையால் கொத்தனாரை வெட்டிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வசித்து வரும் நாகேந்திரன்(39) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு அதே பகுதியில் வசிக்கும் குமார்(27) என்பவர் மது அருந்திவிட்டு தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாகேந்திரன் இதுபோல் தகராறு செய்ய கூடாது என குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

9,000 மீட்டர் மின்கம்பி… வசமாக சிக்கிய 2 பேர்… 2,50,000 ரூபாய் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் 9,000 மீட்டர் மின் கம்பியை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுவதற்காக மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைத்திருந்த 9,000 மீட்டர் அளவுள்ள மின்கம்பி திருடுபோய் உள்ளது. இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் வராங்க… தெறித்து ஓடிய நபர்கள்… இருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் சூதாடி கொண்டிருந்தவர்களின் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பாசி பட்டினத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி பட்டினத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து வரும் திருட்டு… அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்… வசமாக சிக்கிய இருவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் ஒன்றை காவல்துறையினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது டிராக்டரில் கருப்பூர் கண்மாய் பகுதியில் இருந்து அரசின் எந்தவித அனுமதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தப்பட்டு கிடந்த… தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி… தேனியில் பெரும் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் நகரில் திருநாவுக்கரசு(35), அவருடைய மனைவி ஜோதிமணி(28) மற்றும் ஜீவிதா(5) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்துவருகின்றார். இதனையடுத்து முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஆங்கூர்பாளையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஜமாத் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு… படுகாயமடைந்த ஒருவர்… 2 இளைஞர்களை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊர் ஜாமத் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அடுத்துள்ள கொட்டியக்காரன்வலசை கிராமத்தில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அஸ்மத் உசேன்(39). இந்நிலையில் கொட்டியக்கரான்வலசை கிராமத்தில் ஜமாத் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அஸ்மத் உசேனுக்கும் அங்கிருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சீனிஅஸ்கர்(20), இஸ்மத்துல்லா(23) ஆகியோர் அஸ்மத்தை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அஸ்மத் உசேனின் தந்தை கேணிக்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அண்ணன் மீது உள்ள முன்பகையில்… தம்பியின் ஆட்டோவை சேதப்படுத்திய… 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஆட்டோவை சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் கார்த்திக்(24) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சொந்தமாக ஆட்டோ ஒட்டி வருகின்றார். இதனையடுத்து கார்த்திக்கின் அண்ணன் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொம்மை குரு என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த பொம்மை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் கடத்தி வந்த… 2 பேரை கைது செய்த போலீசார்… தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்…!!

ராமநாதபும் மாவட்டத்தில் செம்மண்ணை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் செம்மண் இருப்பது தெரிந்ததும் அதற்கான ரசீதை கேட்டுள்ளனர். அதற்கு டிராக்டர் ஒட்டி வந்தவர்கள் முன்னக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நான் குடிச்சா இவங்களுக்கு என்ன… பரிதாபமாக வாலிபர் பலி… கைது செய்த காவல்துறையினர்…!!

மது அருந்திய காரணத்தினால் தகராறு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த சப்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பாண்டி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற தம்பி உள்ளார். பின்னர் விக்னேஷ் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து இரவு நேரத்தில் ஆத்துமேடு பகுதியில் மதுபானம் அறிந்தியுள்ளார். இதனையடுத்து குடிபோதையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த அவருடைய தம்பி சந்துரு தனது அண்ணன் விக்னேஷிடம் மதுபானம் அருந்தியது குறித்து கேட்டுள்ளார். இதனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டதும் தப்பியோட்டம் …. மடக்கி பிடித்த போலீசார் …. 2 பேர் கைது …!!!

திருவள்ளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன . திருவள்ளூர்  மாவட்டம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே  மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று முன்தினம் கடம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மணலை கடத்தி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர் . அப்போது  போலீசாரை கண்டதும் அந்த 3 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எப்படியோ பிடிச்சிட்டோம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் காவல்துறையினர் போரூர் பிரிவு ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செக்குமேடு பகுதியில் வசிக்கும் அருள் மற்றும் அதிபதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 100 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே வேலைக்கு வர மாட்டேன்… பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த… கடை உரிமையாளர்…!!

தேனி மாவட்டத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள டி.கள்ளிப்பட்டியில் முனியாண்டி மற்றும் அவரது மனைவி நித்யா(30) வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  நித்யா சிவாஜி நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நித்யாவிற்கு அந்த வேலை பிடிக்காததால் வேலையிலிருந்து நிற்பதாக கடை உரிமையாளர்களிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அழகு நிலையத்தின் உரிமையாளர்களான ராஜாமுகமது மற்றும் பிரதீபா அதற்கு மறுத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வந்த திருட்டு… சிசிடிவி கேமராவில் சிக்கினர்… கைது செய்த போலீசார்…!!

நெல்லையில் மீன் வைக்கும் பெட்டியை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் ரமேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தொழிலுக்காக மீன்களை ஏற்றுவதற்கு மீன் பெட்டிகளை அவரது வீட்டின் அருகில் ஒரு இடத்தில் அடுக்கி வைத்துள்ளார்.  இதனையடுத்து அந்த பெட்டிகள் அடிக்கடி திருடு போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இது குறித்து ரமேஷ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போது… வசமாக சிக்கிய 2 பேர்… கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…!!

தேனி மாவட்டத்தில் 10 கிலோ மான் இறைச்சியை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏகலூத்து சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கூடலூர் கே.கே காலனியை […]

Categories

Tech |