போலீஸ் போல் வேடமணிந்து வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 2 பேர் அவரை மறித்துள்ளனர். அவர்கள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்பின் சங்கரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளனர். அந்த ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி சங்கரின் மோட்டார் சைக்கிள் மற்றும் 2150 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் எஸ்.எஸ் […]
