பெட்ரோல் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள பழனிச்செட்டிப்பட்டியில் இருக்கும் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் இருக்கின்றது. இங்கே மேலாளராக ஹரிங்டன் என்பவர் பணியாற்றும் நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் மேலாளராக பணியாற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு நாட்ராயன், ஸ்டாலின், குரு ஐயப்பன் உள்ளிட்ட மூன்று பேர் வந்து […]
