மும்பையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு 7:45 மணிக்கு தானே-பன்வெல் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள் பெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஏறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருக்கைக்காக மற்றொரு பெண் பயணியிடம் வாக்குவதில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் 3 பேரில் ஒருவர் சக பயணியை முடியை பிடித்து அடித்துள்ளனர். இதனால் பெட்டியில் பயணித்த சக பயணிகள் சண்டையை நிறுத்துமாறு அறிவுறுத்தி […]
