பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மகாலிங்கபுரம் நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்வளாகத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த வழியாக சென்ற நகராட்சி தற்காலிக பணியாளர் வனிதா(35) மற்றும் மரப்பேட்டை வீதியை சேர்ந்த நந்தினி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தில் 2 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]
