கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு ஒருபுறம் பாராட்டுகளும், ஒருபுறம் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் […]
