தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் கட்டுபாட்டை இழந்து லாரிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒரு லாரி வெங்காயம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சீர்காழி பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது முன்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது […]
