பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டுகளில் இந்தியாவிற்கு இதுவரை 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]
