2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கந்த பொடிகார தெருவில் வெங்கடேசன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிஷாந்தி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தியாலினி(4) என்ற மகளும், ரூபன்(2) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம் என வெங்கடேசன் தனது மனைவியை அழைத்துள்ளார் […]
