அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள குமணன்தொழு கிராமத்தில் விருமாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல விருமாண்டி கடையை திறப்பதற்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 8,000 ரூபாய் திருடு போனது தெரியவந்துள்ளது. இதேபோல் விருமாண்டி பெட்டி கடைக்கு அடுத்துள்ள முத்தையா என்பவரின் பலசரக்கு கடையில் இருந்த 4,000 ரூபாயும் திருடு போயுள்ளது. […]
