2 கடைகளில் செல்போன்கள், பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தேவராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேவராஜ் மறுநாள் காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 3 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மர்மநபர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்து செல்போன்களை […]
