நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெண் வேட்பாளர் ஒருவர் 2 ஓட்டுகளை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 56 ஆவது வார்டு பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 56 ஆவது வார்டில் பாலசுப்பிரமணியன் என்பவரது மனைவி (41) மஞ்சுளாதேவி என்பவர் கருமண்டபம் பகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் வார்டில் அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் , பா.ஜனதா, தே.மு.தி.க., […]
