11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து இதே போல் போடியை அடுத்துள்ள தம்மிநாயக்கன்பட்டியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞன் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் […]
