சேலம் அருகே 2000 டன் வெள்ளை கற்களை கடத்த முயன்ற நிலையில் கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, டால்மியா போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வெள்ளைகற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என பொதுமக்கள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வெள்ளை கற்கள் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது. […]
