புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்து 5 சிறுமிகளை போதைப்பொருள் கொடுத்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதமங்கலத்தில் கண்ணியப்பன் என்பவர் நடத்தி வரும் வாத்து பண்ணையில் இரண்டு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக தங்கி வாத்து மேய்க்கும் வேலை செய்து வந்த 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குழந்தைநல மையகுழு மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. 5 சிறுமிகளுடன் மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா விசாரணை நடத்தினர். […]
