நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக 2வது மனைவியை அடித்து கொலை செய்த முதியவர் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் கூலித்தொழிலாளியான ராஜூ (எ) வரதராஜ்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்ட நிலையில் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு 2வதாக எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சம்பூர்ணம்(55) என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். […]
